339. | உயிர்களுக்கு இன்பங்களும் பலவித ஆசைத் தொடர்புகளும் ஏற்படுகின்றன.அவை இந்த இன்பங்களில் பற்றுக் கொண்டு இவற்றிலேயே தோட்டமாயிருக்கின்றன.இத்தகைய மனிதர்களே(மீண்டும் மீண்டும்) பிறப்பையும், மூப்பையும் அடைகிறார்கள். | (8) | | | | 340. | அவாவினால் உந்தப்பட்ட மனிதர்கள் வேட்டையில் விரட்டப்பட்ட முயலைப்போல், ஓடித் திரிகிறார்கள். அவாவின் விலங்குகளில் கட்டுண்டு அவர்கள் நெடுங்காலம் துயரத்தை அனுபவிக் கிறார்கள்; இப்படித் திரும்பத் திரும்ப நேருகின்றது. | (9) | | | | 341. | அவாவினால் உந்தப்பட்ட மனிதர்கள், வேட்டையில் விரட்டப்பட்ட முயலைப்போல், ஓடித் திரிகிறார்கள். ஆதலால் மோக பந்தங்களிலிருந்து விடுதலை பெற விரும்பும் பிக்கு அவாவை ஒழிப்பானாக. | (10) | | | | 342. | (அவாவாகிய) வனத்திலிருந்து1, 'மீட்சி பெற்றுவனமற்ற நிருவாணப் பிரதேசத்தை அடைந்தவன் (அவாவாகிய) வனத்திலிருந்து தப்பியபின் அதே வனத்திற்குத் திரும்பி ஓடுகிறான்-விடுதலைபெற்றுத் திரும்பவும் பந்தனத்துள் மாட்டிக் கொள்ளும் இந்த முத்தனைப் பாருங்கள். | (11) | | | | 343. | இரும்பு விலங்கையும், மரக்குட்டையும், கயிற்றுக் கட்டையும் அறிஞர் பலமான தளை என்று கூறுவதில்லை; ஆனால், பொன்னாலும், இரத்தி் னங்களாலும் செய்யப் பெற்ற நகைகளிலும்,மனைவியிடத்தும், மக்களிடத்தும் வைக்கும் பாசமே மிகவும் பலமுள்ளது என்பர். | (12) |
1 | வளம்-காடு என்றும், அவா என்றும் இரு பொருளுடையது. |
|
|
|