பக்கம் எண் :

4. நற்செய்கை - ஸம்மா கம்மந்த

5. நல்வாழ்க்கை - ஸம்மா ஜீவ

6. நல்லூக்கம் - ஸம்மா வாயாம

7. நற்கடைப்பிடி - ஸம்மா ஸதி

8. நல்லமைதி - ஸம்மா ஸம்மதி

1. நற்செய்தி; துக்கம் முதலிய நான்கு வாய்மை களையும் உணர்தல், பாவ புண்ணியங்களைப் பகுத்தறி தல்; உலகின் நிலையாமையைக் கண்டு மெய்ப் பொருளை அறிதல்.

2. நல்லூற்றம்; அவாவை அறுத்து, துவேஷம், கொடுமை முதலியவற்றிலிருந்து மனத்தைப் பாதுகாத்தல்.

3. நல்வாய்மை; பொய், புறங்கூறல், இன்னாச் சொல், பயனற்ற பேச்சு முதலியவற்றை நீக்கி, வாய்மை, அடக்கம், இன்சொல், பயனுள்ள அற ஆராய்ச்சி முதலிய நற்பண்புகளை வளர்த்தல்.

4. நற்செய்கை; உயிர்க்கொலை, களவு, பிறர் மனை விழைதல், பொறாமை, வெகுளி முதலிய தீமை களை விலக்கி நல்லொழுக்கத்துடன் வாழ்தல்.

5. நல்வாழ்க்கை; வாழ்வுக்கு வேண்டிய பொருள் களைத் தீயநெறியில் அல்லாமல் நீதியான முறையில் உழைத்துப் பெறுதல்.

6. நல்லூக்கம்; நன்முயற்சி. இம்முயற்சி நான்கு வகைப்படும். மனத்தில் தீய எண்ணங்கள் எழாமல் காத்தல், முன்னால் எழுந்த இழிவான எண்ணங்களை அடக்கி வெல்லுதல், நல்லெண்ணங்கள் உதிப்பதற்கு ஏற்ற வழிகளில் கருத்து வைத்தல், உதித்த நல்லெண் ணங்களைப் பேணி வளர்த்தல்.