பக்கம் எண் :

அனுபந்தம் ஒன்று
நால்வகை வாய்மைகள்

பௌத்த தருமத்திற்கு அடிப்படையான நான்கு உன்னத உண்மைகள் அல்லது சத்தியங்கள்; துக்கம், துக்க காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் ஆகியவை.

1. துக்கம்- உலகில் பிறப்பு, இறப்பு, பிணி, மூப்பு எல்லாம் துன்பம்; நண்பர்களைப் பிரிதல் துன்பம்; அன் பற்றவர்களின் தொடர்பு துன்பம்; விரும்பியதைப் பெறாமை துன்பம்; ஐம்புலன்களின் வழியே அறிந்து ஆசை கொண்ட யாவும் துன்பத்திலேயே முடிகின்றன. துக்கத்திற்கு மூலகாரணம் பேதைமை; பேதைமையி லிருந்து செயல், செயலிலிருந்து உணர்வு; உணர்வி லிருந்து உருவமும், அருவமும், இவைகளிலிருந்து உணர்ச்சிக்குரிய வாயில்கள், வாயில்களிலிருந்து ஊறு (ஸ்பரிசம்). இதிலிருந்து நுகர்வு, நுகர்விலிருந்து. வேட்கை வேட்கையிலிருந்து பற்று, பற்றிலிருந்து கர்மத் தொகுதி, கர்மத்திலிருந்து பிறப்பு, பிறப்பிலிருந்து உபாதைகள் தோன்றுகின்றன.

2. துக்க காரணம்- சகல துக்கங்களுக்கும் காரணம் ஆசை அல்லது அவர்தான். இதைத் ‘திருஷ்ணை’ என்பர்.

3. துக்க நிவாரணம்- ஆசையை ஒழித்து அவித்து விடுதலே துக்கத்தை ஒழிக்கும் மருந்து.

4. துக்க நிவாரண மார்க்கம்- பரிசுத்தமான எட்டு உறுப்புக்களையுடைய அஷ்டாங்க மார்க்கமே துக் கத்தை நீக்கும் வழி. எட்டு அங்கங்களாவன;

1. நற்காட்சி - ஸம்மாதிட்டி

2. நல்லூற்றம் - ஸம்மா ஸங்கல்ப

3. நல்வாய்மை - ஸம்மா வாசா