பக்கம் எண் :

2கபிலர் அகவல்

 

துஞ்சும்போதந்தப்
            பஞ்சேந்திரியம்
எஞ்செயாநிற்குமோ
            எவ்விடத்தேகுமோ
ஆற்றலுடையீர்
             அருந்தவம்புரிந்தால்
வேற்றுடம்பாகுமோ
            தமதுடம்பாகுமோ
உண்டியையுண்குவ
            துடலோவுயிரோ
கண்டின்புறுவது
            கண்ணோகருத்தோ
நாக்கடிப்பாக
            வாய்ப்பறையறைந்து
சாற்றக்கேண்மின்
            சாற்றக்கேண்மின்
மனிதர்க்குவயது
            நூறல்லதில்லை
ஐம்பதிரவில்
            அகலுந்துயிலினால்
ஒட்டியவிளமையால்
            ஓரைந்துநீங்கும்
ஆக்கையிளமையில்
            ஐம்மூன்றுநீங்கும்