பக்கம் எண் :

கபிலர் அகவல்3

 

எழுபதும்போகநீக்
            கிருப்பதுமுப்பதே
                                      (அவற்றுள்)
இன்புறுநாளுஞ்
            சிலவேயதாஅன்று
துன்புருநாளுஞ்
            சிலவேயாதலால்
பெருக்காறொத்ததுசெல்வம்
            பெருக்காற்றிடிகரை
யொத்ததிளமை
            இடிகரைவாழ்மரமொத்ததுவாழ்நாள்
ஆதலால்
            ஒன்றேசெய்யவும்வேண்டும்
அவ்வொன்றும்
            நன்றேசெய்யவும்வேண்டும்
அந்நன்றும்
             இன்றேசெய்யவும்வேண்டும்
அவ்வின்றும்
            இன்னேசெய்யவும்வேண்டும்
அவ்வின்னும்
            நாளைநாளைஎன்பீராகில்
நாளைநம்முடைமுறைநாள்
            ஆவதுமறியீர்