நமனுடைமுறைநாள் ஆவதுமறியீர் எப்போதாயினுங் கூற்றுவன்வருவான் அப்போதந்தக் கூற்றுவன்றன்னைப் போற்றவும் போகான் பொருடரப்போகான் சாற்றவும்போகான் தமரொடும்போகான் நல்லாரென்னான் நல்குரவறியான் தீயாரென்னான் செல்வரென்றுன்னான் தரியானொருகணந் தறுகணாளன் உயிர்கொடுபோவான் உடல்கொடுபோகான் ஏதுக்கழுவீர் ஏழைமாந்தர்காள் உயிரினையிழந்தோ உடலினையிழந்தோ உயிரிழந்தழுதுமென் றோதுவீராகில்
|