பக்கம் எண் :

கபிலர் அகவல்5

 

உயிரினையன்றுங்காணீர்
            இன்றுங்காணீர்
உடலினையன்றுங்கண்டீர்
            இன்றுங்கண்டீர்
உயிரினையிழந்த
            உடலதுதன்னைக்
களவுகொண்ட
            கள்வனைப்போலக்
காலுமார்த்துக்
            கையுமார்த்துக்
கூறைகளைந்து
            கோவணங்கொளுவி
ஈமத்தீயை
            எரியெழமூட்டிப்
பொடிபடச்சுட்டுப்
            புனலிடைமூழ்கிப்
போய்த்தமரோடும்
            புந்தினைந்தழுவது
சலமெனப்படுமோ
            சதுரெனப்படுமோ
பார்ப்பனமாந்தர்காள்
            பகவர்வதுகேண்மின்
இறந்தவராயுமை
            இல்லிடையிருத்திப்