பக்கம் எண் :

6கபிலர் அகவல்

 

பாவனைமந்திரம்
            பலபடவுரைத்தே
உமக்கவர்புத்திரர்
            ஊட்டினபோது
அடுபசியாற்குலைந்
            தாங்கவர்மீண்டு
கையேந்திநிற்பது
            கண்டதார்புகலீர்
அருந்தியவுண்டியால்
            ஆர்பசிகழிந்தது
ஒட்டியர்மிலேச்சர்
            ஊணர்சிங்களர்
இட்டிடைச்சோனகர்
            யவனர்சீனத்தர்
பற்பலநாட்டிலும்
            பார்ப்பாரிலையால்
முற்படைப்பதனில்
            வேறாகியமுறமைபோல்
நால்வகைச்சாதியிந்
            நாட்டில்நீர்நாட்டினீர்
மேல்வகைகீழ்வகை
            விளங்குவதொழுக்கால்
பெற்றமுமெருமையும்
            பிறப்பினில்வேறே