பக்கம் எண் :

124இலக்கணக் கொத்து 

காரகம் என்பதன் இலக்கணம்

14விளிகுறை இரண்டையும் விட்டவேற் றுமைகள்
வினையான் முடியின் காரகம் எனப்பெறும்;
குறையும் வினைகொளின் ஒரோவழிக் கூடும்

[வி-ரை: விளிவேற்றுமையும் ஆறாம் வேற்றுமையும் நீங்கலான ஏனைய வேற்றுமைகள், வினையைக் கொண்டு முடிந்து பொருள் முற்றுப்பெறுமாயின், அவை காரகம் என்ற பெயரைப் பெறும். பெரும்பாலும் பெயரையே கொண்டு முடியும் ஆறாம் வேற்றுமை சிறுபான்மை வினைகொண்டு முடிந்து காரகமாதலும் உண்டு.

எழுத்ததிகாரம்: அதிகாரம் - அதிகரித்தல்; எழுத்தினது அதிகரித்தலை உடையது என்புழி, ஆறாவது வினைமுதற்பொருண் மையின்கண் வந்த காரகம் என்பது சூத்திரவிருத்தி.] 2

காரகத்திற்கு எடுத்துக்காட்டு

15நாரா யணப்பூ ஓரா யிரத்தைக்
கரத்தால் கொய்துஓர் அரற்கே கொடுத்துச்
சக்கரச் சிறுமையின் நீங்கி நற்சுவைப்
பாற்கடல் கண்ணே பள்ளிகொண் டான்எனக்
காரகம் முழுதும் வந்தன காண்க;
இவற்றினுள் ஒன்றே இயம்பினும் காரகம்.

[வி-ரை: இப்பாடலுள் ஆறாம் வேற்றுமை நீங்கலான ஏனைய வேற்றுமைகள், நாராயணன் பள்ளிகொண்டான் - பூ ஓராயிரத்தைக் கொய்து - கரத்தால் கொய்து - அரற்கே கொடுத்து - சிறுமையின் நீங்கி - பாற்கடல்கண்ணே பள்ளி கொண்டான் என வினையொடு முடிதலான், இப்பாடல் காரகம் ஆறனுக்கும் எடுத்துக்காட்டு. இங்ஙனமே பிரயோக விவேக நூலாரும்,