| ஒழிபியல் - நூற்பா எண். 1, 2 | 245 |
இவை முறையே ற, ன, ழ, எ, ஒ என்னும் தமிழ்ச் சிறப்பெழுத்து ஐந்தானும் திரிந்தன. உலகம் - [லோக:- மொழி முதற்கண் தோன்றல்] தத்தும் - [தத்வம் - மொழி இடைக்கண் தோன்றல்] வாக்கு - [வாக் - மொழிக்கடைக்கண் தோன்றல்] இடபம் - [ரிஷபம் - மொழி முதற்கண் திரிதல்] விடம் - [விஷம் - மொழி இடைக்கண் திரிதல்] இராமன் - [ராம:- மொழிக்கடைக்கண் திரிதல்] பரிசம் - [ஸ்பரிசம் - மொழி முதற்கண் கெடுதல்] முத்தி - [முக்த்தி - மொழி இடைக்கண் கெடுதல்] தநு - [தநுஸ் - மொழிக்கடைக்கண் கெடுதல்] என முறையே காண்க. ஆக்கினை - ஆணை; விஞ்ஞானம் - விண்ணானம்; விருத்தம் - வட்டம்; நிருத்தம் - நட்டம்; திடம் - திட்டம்; விபு - விம்மு இங்ஙனம் இன்னும் பரந்து வருவன எல்லாம் இவ்விதியுள் அடக்கிக்கொள்க. [வி-ரை; இச்செய்திகளில் பல பிரயோகவிவேகம் இரண்டாம் காரிகை உரையில் விளக்கப்பட்டுள்ளன.] 1 தமிழ்ச்சொல் அமைப்பு 88 | பொதுஎழுத் தானும் சிறப்புஎழுத் தானும் ஈரெழுத் தானும் இலங்கும் தமிழ்மொழி.
|
எ-டு: நிலம், நீர் - [பொது எழுத்து] ஒன்று, எறி - [சிறப்பெழுத்து] பழம், வாழை - [ஈரெழுத்து] என முறையே காண்க. |