பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்231

கொண்டு சிக்கலில் சிக்கியுள்ள ஒருவனின் கனவுகள் சில சிறுகதைகளின் களங்களாக இருக்கின்றன. உதிரிக் கூட்டம், சரிவு, இழப்பு, அறியாத முகங்கள் போன்ற சிறுகதைத் தலைப்புகள் ஓரளவு இவரிடம் உள்ள வெறுமையையும், கூட்டத்தில் காணாமற்போன குழந்தையின் நிலைமையையும் ஜாடையாகத் தெரிவிக்கின்றன. இன்றைய சமூகச் சூழல், அதற்கு இடம் கொடுக்கும் அமைப்பு, புதிய தலைமுறைக்குப் பொருந்தாத பழைய மதிப்பீடுகள், அவற்றிற்கெதிராக எழுப்பப்படும் குரல் இவையெல்லாம் சற்று நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ வெளிப்படுகின்றன இவரது சிறுகதைகளில்.

கதை படைக்கும் கலையில் ஒரு கூரிய பார்வை புலனாகிறது. ‘இலை’ கதையில்வரும் மாமி, மற்றும் கறிவேப்பிலை பறிக்கவரும் ஆள் இருவரும் ஒருவரைவிட ஒருவர் கறாராக இருக்கிறார்கள். துணைப்பாத்திரங்கள் பற்றிய விவரங்கள் தெளிவாக இருக்கின்றன. ‘தமக்கென்று வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டிவிடாமல் அதற்குள்ளேயே தம்மால் இயன்ற அளவிற்கு பௌருஷத்துடன் இருக்கப்பழகி அனேக ஆண்டுகளாகிவிட்டன அவருக்கு’ என்னும் மாமாவைப் பற்றிய வாசகத்தைப் படிக்கும்போது மாமல்லன் பார்வை பளிச்சென்று பிடிபடுகிறது.

உதிரிக் கூட்டம் கதைக் களம் வீட்டிலிருந்து தெருவுக்கு வருகிறது. சென்னை நகரத்தின் மத்தியதர வர்க்கத்தின் திரிசங்கு சொர்க்க வாழ்க்கை நன்றாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. கதை சொல்லும் உத்தி கொஞ்சம் நையப் புடைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது.

‘சரிவி’ன் நாயகனுக்கு ஒரு முகம் இல்லை. நீங்கள் பார்த்திருக்கக்கூடிய, உணர்ந்திருக்கக்கூடிய விஷயந்தான். ஆழ்ந்த ஒரு அதிர்ச்சியை அளிப்பதில் மாமல்லன் வெற்றி பெற்றிருக்கிறார். மெல்ல நகரும் திரைப்படம் ஒன்றைப் போல செய்திகள் ஊர்கின்றன. நடைகதைக்கேற்ப இயல்பாக உள்ளது. ஒரு நல்ல கதையொன்று சுலபமாகச் சொல்லமுடிகிறது. கதையில் வருபவன் ஒரு பொந்தில் வாழ்வதாக உணரும் கட்டம் Metamorphosis கதையில் ஏற்படும் நிகழ்வை நினைவுபடுத்தும் விதத்தில் இருக்கிறது. தனிமனித வீழ்ச்சியைச் சித்தசிப்பதில் இக்கதை ஒரு குறிப்பிடத்தக்க இடம்பெறுகிறது.

‘இழப்பு’ கதையும் பொருளாதார உலகின் சீரழிவுகளையும் சங்கிலித் தொடர்போல் வீழ்ச்சியடையும் மனித உறவுகளையும் சித்தரிக்கிறது. அதில் வரும்மூவரின் தோற்றங்களும் இயற்கையாகப் படைக்கப்பட்டிருக்கிறது.

‘வயிறு’ போன்ற கதைகளைப் பற்றிப் பேசவும் விமர்சிக்கவும் போலியான முகத்திரை ஒன்றைப் போர்த்திக்கொண்டால்தான் வசதியாயிருக்கும். உடல் இயந்திரத்தைப் போலச் செயல்படும் பொழுது மனிதனின் ஆன்மா பணம் பணம் என்று ஜெபிக்கும் அவலம்மிகவும் கொடியதாக இருக்கிறது. மாமல்லன் கலைக்கு இது ஒரு பரிசாகும்.

‘அறியாத முகங்கள’் கதையும் மீண்டும் பொருளாதாரம் எப்படி மனித உறவுகளைச் சிதைக்கிறது என்பதை விவரிக்கிறது. செல்லாக்