பக்கம் எண் :

232ஆத்மாநாம் படைப்புகள்

காசாகும் மலட்டுக் கோபம் தனிமனிதனை ஆட்டுவிக்கும் இடங்கள் சிறப்புடன் வெளியாகியிருக்கின்றன.

இப்படி இவர் எடுத்துக்கொண்டுள்ள கருவெல்லாம் பெரும்பாலும் மனிதத்தின் வீழ்ச்சியை விவரித்து வாசகனையே இதற்கான முடிவுகளைக் கேட்கிறது. பெருமூச்சொன்றை விட்டபடி வாசகன் தான் சிறுகதை இலக்கியம் படைக்கும் நிஜத்தைப் பொய்யாக்க வேண்டும். இப்படிப்பட்ட வாசகர்களை உருவாக்கும்பொழுது ஓரளவிற்குக் கலை முழுமை அடைகிறது.

மீட்சி எண் 7, 1984