பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்233

இரவும் பகலும்

யற்கை முழுமையான ஈடுபாட்டை அளிப்பதில்லை; இது நல்லது அல்லது மோசம் என்று ஒருவர் கருக்கொள்வதில்லை.

நமக்கு என்றுமே ஓய்வில்லை; இக்கணமே சாசுவதமானது.
                 சிந்திப்பதும் காரணம் கற்பிப்பதும் இரு வேறு விஷயங்கள்.

ஒருவர் வரைவது பார்வைக்குட்பட்டால் மட்டும் போதாது; அது தொட்டுணரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அது கருவை உருவகப்படுத்துகிறது. கலைப்படைப்பு மொட்டை உருவகப்படுத்துகிறது.

கலையில் உண்மை சிதைக்கப்படாதிருக்கும்வரை எந்த விளைவும் இல்லை.

பின்பற்றுபவர்கள் எல்லோரும் சுத்தமான, முழுமையான, குருட்டு பேடிகள். நான் விரும்புவது போல் நான் செய்வதில்லை; என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.

ஒரு கலைஞனின் தனித் தன்மை அவனது மொத்த உறுதிப்பாடுகளினால் உருவானதல்ல.

ஒரு கலைஞனால் அளிக்க முடிந்ததை விடவும், ஒரு விமர்சகனிடம் அவன்பார்த்ததைவிடவும் கேட்கக் கூடாது.

மக்களைப் பிரதிபலித்ததாகவே திருப்தி அடைவோம்; நாம் நம்ப வைக்க முயற்சிப்பதில்லை.

கலை உருவாக்கப்படுவதே கிளர்ந்தெழ வைக்கத்தான், விஞ்ஞானம் மீண்டும் உறுதிப்படுத்துவதற்கே.

ஒரு மனிதன் சொல்கிறான;் கடவுளின் பெயரால், மற்றொருவன் சொல்கிறான்: கடவுள் எம்முடன் இருக்கட்டும். மூன்றாவதாக ஒருவன் சொல்கிறான்: கடவுளும் என் உரிமைகளும்.

ஓவியன் வடிவங்களிலும் வண்ணங்களிலும் நினைக்கிறான;் அவனது நோக்கம் கவிதை.

ஒருவன் படைக்க எண்ணுகையில் பின்பற்றத் தேவையே இல்லை.

ஜியார்ஜ் ப்ராக்கின் (1917-1952)
குறிப்பேட்டிலிருந்து