பக்கம் எண் :

104எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் என்போர் அவ்வெழுவர். (பா. 36)

கரிகாற் சோழன், வெண்ணி என்ற இடத்திலே பதினோரு வேளிர்களையும், தன்னை எதிர்த்த மற்ற மன்னர்களையும் போரிலே வென்றான். (பா. 246)

வெண்ணிப் போர்க்களத்திலே, கரிகால் வளவனுடன் போரிட்ட சேரலாதன் தோல்வியடைந்தான். (பா. 55)

காவிரிப்பூம்பட்டினத்திலே இருந்து அரசாண்ட பொலம்பூட்கிள்ளி என்னும் சோழன், கோசர்களின் பெரிய போர்ப் படையை வென்று, அவர்கள் ஆண்ட நிலத்தைத்தான் ஆள விரும்பினான். (பா. 205)

இளம் பெரும் சென்னி யென்னும் சோழன், வடுகருடன் போர்செய்தான்; அவர்களுடைய கோட்டையை நொறுக்கினான்; அவர்களைக் கொன்று வெற்றி பெற்றான். (பா. 375)

காரியென்பவன் கோவலூரின் தலைவன்; பெரிய தேரையுடையவன்; பெண்ணையென்னும் பேராற்றுத் துறையின் தலைவன். (பா. 35)

காரியென்பவன் வில் யுத்தத்திலே சிறந்த ஓரியைக் கொன்றான்; அவனுடைய கொல்லி மலையைச் சேர மன்னர்க்குக் கொடுத்தான் (பா. 209)

சேரலாதன் என்னும் அரசன் கடற்படையை யுடையவன்; இமயமலையிலே விற்பொறியைப் பொறித்தவன்; மாந்தை என்னும் இடத்திலே பகைவர்கள் பணிந்து கொடுத்த திறைப் பொருள்களைப் பெற்றவன். (பா. 127)

பாரியென்னும் வள்ளல் பறம்பு மலையின் தலைவன் அம்மலையை மூவேந்தர்களும் முற்றுகையிட்டனர்.