பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்103

ஆரியர் படைகள், தஞ்சையின் பக்கத்திலே உள்ள வல்லம் வரையிலும் படையெடுத்து வந்த செய்தியை அறியலாம். இந்தப் படையெடுப்பு வடநாட்டிலிருந்து வந்த ஆரியர் படையெடுப்பா? அல்லது தமிழ் நாட்டிலே நிலைபெற்றிருந்த ஆரியர்களின் படையெடுப்பா? என்பது ஆராயத் தக்கது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டிலே ஆரிய அரசன் பிரகதத்தன் என்பவன் ஒருவன் ஏதோ ஒரு சிறு நிலப்பகுதியை ஆண்டு வந்தான் என்று அறிகின்றோம். திருநெல்வேலிச் சீமையிலே திருக்குற்றாலத்தையுள்ளிட்ட ஒரு பகுதிக்கு ஆரிய நாடு என்ற பெயர் வழங்கியிருக்கின்றது. திருக்குற்றாலத்தைப் பற்றிய நூல்களிலே இதைக் காணலாம்.

ஆரியங்கா, ஆரியக்குடி, ஆரியரூர், ஆரியப்படையூர், ஆரியன் குப்பம் என்ற பெயர் கொண்ட இடங்கள் தமிழ் நாட்டில் இருக்கின்றன. ஆரியக்குடி அரியக்குடி என்றும், ஆரியரூர் அரியலூர் என்றும் இக்காலத்தில் வழங்குகின்றன. இவைகள் இன்னும் சிந்திக்கத்தக்க செய்திகள்.

வரலாறுகள்

கோசர்கள் என்பவர்கள் போர் செய்வதிலே சிறந்தவர்கள். அவர்களுடைய செல்வங் கொழிக்கும் நகரம் செல்லூருக்கும் கிழக்கில் உள்ளது. (பா. 90)

கோசர்கள் துளுவ நாட்டை ஆண்டவர்கள். (பா. 15)

புல்லி யென்பவன் மழவர் நாட்டைத் தனக்குப் பணியச் செய்தான். வட வேங்கடத்தை ஆண்டவன். (பா. 61)

பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானம் என்ற இடத்திலே எழுவரைப் போரிலே வென்றான். சேரன், சோழன்,