| 102 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
தங்களுக்குள் போரிட்டு வந்தனர். இவர்கள் போரிட்டுக் கொள்வதற்கு என்ன காரணமோ அதே காரணந்தான் தமிழரையும் ஆரியரையும் சண்டையிடச் செய்தது. சேர சோழ பாண்டியர்கள் கலாசாரத்தில் எப்படி ஒன்றுபட்டிருந்தனரோ, அதைப் போலத்தான் அக்காலத்தில் ஆரியரும் தமிழரும் கலாசாரத்தில் ஒன்றுபட்டிருந்தனர். ‘‘ஆரியர் பொன் படுநெடுவரை (பா. 398) ஆரியர்களின் பொன் விளைகின்ற உயர்ந்த இமயமலை’’. ‘‘ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன் வஞ்சி (பா. 396) ஆரியப் படைகள் அலறும்படி தாக்கி-பெரும் புகழும் பழமையும் வாய்ந்த இமயமலையிலே-வளைந்த வில் முத்திரையைப் பொறித்து-தன்னை எதிர்த்த கோபமுடைய வடநாட்டு மன்னர்களைத் தனக்கு அடிமையாக்கிக் கொண்ட சேரனது வஞ்சிமா நகர்’’ இவைகளால் வடநாட்டினரை ஆரியர்கள் என்று கூறியிருப்பதையும், தமிழ் மன்னர்கள் வடநாட்டின்மேல் படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதையும் காணலாம். ‘‘மாரி அம்பின் மழைத்தோல் சோழர் வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை ஆரியர் படையின்; (பா. 336) மழையைப்போன்ற அம்புகளையும், மேகத்தைப் போன்ற கேடகங்களையும் உடைய சோழமன்னர்களின்-விற்படையோர் நிறைந்த சிற்றூர்கள் சூழ்ந்த-வல்லத்தின் புறத்திலே, காவற் காட்டிலே தோற்று ஓடிப்போன ஆரியர்களின் படையைப்போல’’ |