அமர்காமம் மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக்கணிகை; பெண்மைப் பொதுமை; பிணையிலி; ஐம்புலத்தைத் துற்றுவ துற்றும் துணையிதழ் வாய்த்தொட்டி; முற்றும் நறுநறா மொய்புனல் அட்டிக், காரிகைநீர் ஏர்வயல், காமக்களி நாஞ்சில், மூரிதவிர, முடுக்கும், முதுகாடி. (பா. 20) விரும்பும் காமத்தை வஞ்சனைகளோடும் பொய்களோடும் சேர்த்துக் கொடுத்து ஆண்களை மயக்குகின்ற விலைமாதே! பெண்களின் உயர்ந்த தன்மையைப் பின்பற்றாமல் காமுகர்க்குப் பொது மகளாய் வாழும் தன்மையைப் பின்பற்றியவளே! துணைவன் இல்லாமல் வாழ்கின்றவனே! ஆடவர்கள் விரும்பும் ஐம்புல இன்பங்களையும் அனுபவிக்கும் அளவுக்கு அனுபவிக்கக் கொடுக்கும் இரண்டு இதழ்களோடு கூடிய வாயையுடைய பன்றித் தொட்டியே! நிறைய நல்ல கள்ளாகிய நீரைப் பாய்ச்சி-பெண்தன்மையாகிய அழகிய வயலிலே-காமக் களிப்பு என்னும் கலப்பையினால் கற்பென்னும் வலிமை அழியும்படி உழுகின்ற பழைய சாலே. ’’ இதனால் விலைமகள் எவ்வளவு வெறுக்கப்பட்டாள் என்பதைக் காணலாம். ஆகையால் பரத்தையிற் பிரிவு என்பது கூடாவொழுக்கம் என்பதில் ஐயமில்லை. கைக்கிளை என்பது காமம் இன்னதென்று அறியாத ஒரு இளம்பெண்ணிடம் ஒருவன் கொள்ளும் காதல். இதனை ஒருதலைக் காமம் என்பர். இதுவும் கூடா வொழுக்கமேதான். பெருந்திணை யென்பது பொருந்தாக் காமம். தன்னுடன் வாழச் சம்மதமில்லாத பெண்ணுடன் பலவந்தமாக வாழ்க்கை நடத்தல். வயது முதிர்ந்தோன் இளம்பெண்ணுடன் வாழ ஆசைப்படுதல்; நோயாளி அழகிய பெண்ணுடன் பலவந்தமாக |