களைக் கொண்ட பாடல் கலிப்பாடல். இத்தகைய பாடல்களின் தொகுப்பே கலித்தொகை. ஆகவே எட்டுத்தொகை நூல்களிலே ஆசிரியப்பா பரிபாடல், கலிப்பா ஆகிய மூன்று வகைப் பாடல்களே அமைந்திருக்கின்றன. நூல்கள் நுவல்வன இந்த எட்டுத்தொகை நூல்கள் அகப்பொருட் செய்திகளைப் பற்றியும், புறப்பொருட் செய்திகளைப் பற்றியும் கூறுகின்றன. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, அகநானூறு, பரிபாடல், கலித்தொகை ஆகிய ஆறு நூல்களும் அகப் பொருளைப் பற்றியவை. பதிற்றுப்பத்து, புறநானூறு இரண்டும் புறப்பொருளைப் பற்றிக் கூறுவன. அகப் பொருளைப் பற்றிக் கூறும் நூல்களிலே பண்டைத் தமிழ் மக்களின் மணவாழ்வு, சமுதாய வாழ்வுகளைப்பற்றி அறியலாம். அவர்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களைப் பற்றியும் காணலாம். புறப்பொருளைப் பற்றிக் கூறும் நூல்களிலே பண்டைத் தமிழர்களின் அரசாட்சி, நீதிமுறை, போர்ச் செய்திகள், வாணிகம், தொழில்கள், கலைகள் போன்ற பல செய்திகளைக் காணலாம். பண்டைத் தமிழ் மக்களின் சமுதாய அமைப்பு, அவர்களுடைய பழக்க வழக்கங்கள் ஆகிய பலவற்றையும் கண்டறியலாம். தனி நூல்கள் ஏன்? நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, பரிபாடல், கலித்தொகை என்னும் ஆறு அகப்பொருள் |