| 70 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
நீர்த்துறையையுடைய தலைவன் நாணமடையும்படி, பகைவரால் இகழப்படும் பழி அவன்மீது அமரும். துறந்துஓர் தேஎத்து இருந்து நனிவருந்தி ஆருயிர் அழிவதா யினும், நேர் இழை கரத்தல் வேண்டு மால்மற்றே; பரப்புநீர்த் தண்ணந் துறைவன் நாண நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே’’ (பா. 382) ஆண்கள் கற்பு பண்டைத் தமிழர்கள் பலதார மணம் புரிந்து வந்தனர். அவர்கள் பல மனைவியர்களை மணந்து கொள்வதோடு மட்டும் நிற்கவில்லை. செல்வமுடையவர்களும், சிறந்த வீரர்களும் பரததையர்களுடனும் சேர்ந்து வாழ்ந்தனர். இதற்காகவே பரத்தையர் சேரி என்ற இடங்களும் இருந்தன. கணவன் கணிகையர் வீட்டுக்குச் சென்று வந்ததை அறிந்தால் காதலி வருந்துவாள்; ஊடல் கொள்வாள்; இச்செய்தி மருதத்திணைப் பாடல்களிலே கூறப்படுகின்றன. ஆண்களுக்கு இப்படித் தவறு செய்யும் உரிமை இருந்த காலத்தில் கூட அவர்களிலே பலர் கட்டின மனைவிமார்களிடம் காதலும் கற்பும் உடையவர்களாகவே நடந்துகொண்டனர். ஒரு நற்றிணைப் பாட்டு இச் செய்தியை எடுத்துக்காட்டுகின்றது. ‘‘என் காதலியை என் உள்ளத்தை விட்டுப் பிரிக்கவே முடியாது. அவள் எப்பொழுதும் என் நெஞ்சத்திலேயே குடிகொண்டிருப்பாள்’’ என்று ஒருவன் சொல்வதாக அமைந்துள்ளது அப்பாடல். ‘‘காற்று மோதியடித்தாலும் சரி. கடுமையாக இடியிடித்தாலும் சரி. இன்னும் எண்ணற்ற இடையூறுகள் நேர்ந்தாலும் சரி. இந்தப் பெரிய நிலமே கிடுகிடென்று நடுங்கினாலும் சரிதான்! மிகவும் அழகிய தோற்றத்தை |