| 200 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
உடலைவிட்டு உயிரைத் தனியாகப் பிரித்துக் கொண்டு போகும் தெய்வம் ஒன்று உண்டு என்று நம்பினர். இதற்குக் கூற்றுவன் என்று பெயர். இன்னும் பல தெய்வ வணக்கங்கள் தமிழ்நாட்டில் இருந்தன. தேவர்கள் அமுதம் வேண்டிக் கடல்கடைந்தது; பரமசிவன் நஞ்சுண்டது; ஆகிய வரலாறுகள் தமிழ்நாட்டிலே வழங்கியிருந்தன. இவைபோன்ற இன்னும் பல செய்திகளையும் பழந்தமிழர் நாகரிகத்தையும் இந்த மலைபடுகடாம் நமக்குக் கூறுகின்றது. ***** |