டான். எப்படியோ மோப்பம் பிடிச்சு சரியான இடத்துக்கு வந்துட்டான்” என்றான், சேரன். சேரனின் யூகம் முற்றிலும் சரி. இரண்டு பேருடன் புறப்பட்டுப் பேருந்து நிலையத்தை அடைந்த ஜாக்கி பலரிடம் விசாரணை செய்து, அழகான ஒரு நாயை, நாய் வண்டி பிடித்துக்கொண்டு போனதை அறிந்தான். நாய் இருக்கும் இடத்தை அடைந்தபோது, மாலை ஆகி விட்டது. அலுவலகத்தில் ஒரு அதிகாரியும் காவலுக்கு இரண்டு பேரும் இருந்தனர். அந்த அதிகாரியிடம் தன் மகன் நாயில்லாமல் சாப்பிட மாட்டான் என்று கூறி முதலில் நூறு ரூபாய் நோட்டை நீட்டினான். பிறகு இன்னொரு நோட்டை நீட்டினான். அதிகாரி அதை வாங்க வில்லை. காரணம், லஞ்சம் வாங்க விரும்பாத நேர்மையாளர் அவர் என்று நினைத்துவிட வேண்டாம். லஞ்சத் தொகையை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தவே வாங்கவில்லை. அதிகாரி வெளிக்கதவுக்கு அருகே வந்து அங்கு காவலாளியால் தடுத்து நிறுத்தப்பட்ட ஜாக்கியிடம் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது, கொஞ்ச தூரத்தில் இருந்த அலுவலக அறையிலிருந்த தொலைபேசி ஒலித்தது. ‘இதோ வருகிறேன் !’ என்று கூறிவிட்டு வந்து, தொலைபேசியை எடுத்தவர், போலீஸ் கமிஷனரே பேசுவதைக் கேட்டு நடுங்கி நடந்ததைக் கூறிவிட்டார். மறுமுனையிலிருந்த போலீஸ் கமிஷனர், “நாயைக் கேட்ட ஆசாமியை அங்கேயே நிறுத்திவை. நான் ஆட்களை அனுப்புகிறேன்” என்று கூறினார். போலீஸ் கமிஷனர் அறை உடனே சுறுசுறுப்பு அடைந்தது. துணைக் கமிஷனர் வரவழைக்கப்பட்டார். அவரே போதுமான காவலர்களுடன் சென்று நாயைக் கேட்டவனையும் அவனுடன் இருப்பவனையும் கைது செய்ய வேண்டும் என்றும், காக்கர்ஸ் ஸ்பானியல் நாயை |