பக்கம் எண் :

134 

திருச்சியில் -

பத்தாம் வகுப்பு மாணவன் முத்து தொலைக்காட்சியின் முன்னே அமர்ந்து, சேரனின் வீரத்தைப் பற்றிய ஒரு மணி நேர நிகழ்ச்சியைப் பார்க்கிறான். நிகழ்ச்சியின் முடிவில், “நானும் சேரனைப் போலத் திகழப் போகிறேன். நாடு எனக்கு என்ன செய்தது என்று கேட்க மாட்டேன் ! நாட்டுக்கு நான் என்ன செய்தேன் என்று கேட்டுக் கொள்வேன்! நாட்டுக்குச் சேவை செய்து நானும் ஒரு சேரனாவேன் !” என்று சபதம் செய்கிறான்.

இப்படி வீர சபதம் செய்தவன் இந்த முத்து ஒருவன் தானா?

திருச்சியில், சேலத்தில், சென்னையில், கோவையில், பம்பாயில், டெல்லியில், கல்கத்தாவில் இன்னும் பல ஊரில், சேரனைப் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்த லட்சக்கணக்கான சிறுவர்களில் பல நூறுபேர் திருச்சி முத்துவைப் போலச் சபதம் செய்தனர் ! அவர்களில் ஒரு நூறு பேர் செய்த சபதத்தை நிறைவேற்றினால்கூடப்போதும். அப்புறம் பாரதத்தை யார் அழிக்கமுடியும்? அழிப்பதா? இல்லை ! இல்லை ! பாரதத்தை யார் அசைக்க முடியும்? அசைப்பாதா? அதுவும் முடியாது ! பாரதத்தைப் பகைவர் யார் அணுக முடியும்? முடியாது ! முடியாது ! முடியவே முடியாது !


முற்றும்