“அறையில் உள்ள திரைகளைப் போட்டு எரித்துத் தீயை உண்டாக்கி, அதன் மூலம் குழப்பம் உண்டாக்கித் தப்பித்துக் கொள்ளலாம்.” மலர்ந்தது அவன் முகம். மறுநிமிடமே அது குவிந்தது. தீ உண்டாக்கத் தீக்குச்சி வேண்டுமே ! தீப்பெட்டி காலியாக அல்லவா இருக்கிறது. சேரன் மீண்டும் சிந்தித்தான். தீப்பெட்டியை அவன் திறந்து பார்த்தபோது அது எளிதாகத் திறக்கவில்லை. கொஞ்சம்ஆற்றலைச் செலுத்தி அழுத்தித்தான் திறந்தான். ஏன் இந்த இறுக்கம்? சேரன் காலித் தீப்பெட்டியைக் கையில் எடுத்தான். மெதுவாகத் திறந்தான். முன்போலவே அழுத்தித்தான் திறக்கவேண்டியது இருந்தது. பாதி திறந்துவிட்டு ஏன் அந்த இறுக்கம் என்று ஆராய்ந்தான். தீப்பெட்டியின் வெளிக்கூடுக்கும், உள்ளே நுழைக்கும் குச்சிகள் வைக்கப்படும் அறைக்கும் இடையில் ஒரு தீக்குச்சி இருப்பதைக் கண்டான். சில தீப்பெட்டிகளின் உள் அறை இறுக்கமாக இல்லாமல் இருந்தால், அந்த அறை முழுவதும் வெளிவந்து குச்சிகளைக் கீழே கொட்டிவிடும். அந்தப் பெட்டிக்கும் இறுக்கம் தர, அறையின் பக்கத்தில் ஒரு தீக்குச்சியை வைத்து, அப்படியே சொருகினால் இறுக்கம் வரும். அந்தக் காலிப் பெட்டியில், பக்கவாட்டில் அப்படி ஒரு தீக்குச்சி இருந்தது. தீக்குச்சியின் வெள்ளைப் பகுதி தெரிந்தது. சேரன் பெட்டியை மெதுவாகத் திறந்து, முழுமையாகத் தள்ளினான். வெளிக்கூடும், உள் அறையும் தனித் |