மூன்று வேளையும் உண்டு செறிமானத்திற்கு மருந்து உண்டுகிடக்க வேண்டும்? உண்டுவிட்டு மாடுபோல், அவர்கள் உறங்கும்போது வீட்டில் உள்ள பணத்தையும், நகைகளையும் கொள்ளையடிப்பதால் என்று. வேங்கை : சரிதான், திருடுவதைக் கண்டுவிட்டால் என்ன செய்வது என்று கேட்டான். அதற்குப் புலிக்குட்டி புகலுவான் : திருடியவர்கள் அவர்களை, இதோ இந்த ஆளின் அடியில் நடக்கும் அறமன்றத் திற்குத்தான்கொண்டு வரவேண்டும். நம்மை அவ்வாறு கொண்டு வரமுடியுமா? அது சரிதான் என்று வேங்கை நகைத்தான். புலிக்குட்டி மேலும் எண்ணத்தில் ஆழ்ந்தான். அவன் சொன்னான் : எதற்கும் நாம் முன் எச்சரிக்கையாக இந்த ஆலமரத்தையே அடியோடு வெட்டி விறகாக்கிவிடவேண்டும். புலிக்குட்டியின் இந்த அரிய கண்டுபிடிப்பு ஒத்துக் கொள்ளப்பட்டது. வேங்கை ஊராருக்கு ஒரு அறிவிப்பு விடுத்தான். அதன்படி மறுநாள் காலையில் ஊர்மக்கள் எல்லோரும் தலைக்கு ஒரு கோடரி அல்லது கடப்பாரையுடன் ஆலமரத்தடியில் வந்து சேரவேண்டும். பெண்கள் ஒவ்வொருவரும் தட்டு, அரிவாள் கொண்டு வரவேண்டும். என்பதுதான் அறிக்கை. ஊர் பெரிய மனிதர்களும், ஆலின் அடியில் மன்று கூடி ஆற ஆய்வு செய்துவரும் நடுவினர்களும், தம் பங்குக்கு ஆன ஒரு கேடாரியோ, கடப்பாரையோ முன்னேற்பாடு செய்து விட்டார்கள். |