பக்கம் எண் :

104ஏழைகள்

இவர்கள் அறநூல் அறிந்தவர்கள். தமிழ் இலக்கியப் புலிகள். ஆனால் அஞ்சும் இயல்பு உடையவர்கள்.

மக்கள் தலைவரே! பொது மன்று நடைபெறும் ஆலை வெட்ட ஆயுதம் காணுகின்றார்கள் என்பதால் மக்கள் எல்லோருமே ஆயுத முன்னேற்பாட்டை முடித்து விட்டார்கள்.

வேங்கையின் வீட்டுக்கு எதிர்த்த வீட்டில் இருப்பவர் பெயர் புறப்பாட்டுக் கணக்காயன் முத்துவீரன் என்பது. அவர் சிறிது நாட்களாக மனித வாழ்க்கை என்பது பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி அதுபற்றி ஒரு முடிவுக்கு வந்தவர்

அஞ்சிய உள்ளத்தில்.........

அறுபது ஆண்டு நிறையப் பெற்றவர். ஆயினும் ஒழுக்கம் உடையவர் ஆதலால் உடல் நலம் கெடாதிருந்தார் தோற்றம் ஓர் யானை.

அவருக்கும் கிடைத்தது அறிவிப்பு.

காலையில் ஆலமரம் வெட்டப் புறப்படு என்பதுதானே அறிவிப்பின் சுருக்கம். அறிவிப்பைக் கண்டவுடன் மனைவியை அழைத்தார்; அவள் வந்தாள்.

அடி முருகாத்தா! என் அன்பே! ஒன்று கேள். நம் ஆசைகள் தீர்ந்தன. இனியும் நுகர வேண்டும் என்பது ஒன்றும் இல்லை. பையனுக்குத் திருமணம் முடித்தாகி விட்டது. பெண்ணுக்கும் திருமணம் முடித்து விட்டேன். அவர்களும் பிள்ளைகுட்டி வேலை வித்து நிறைய உடையவர்கள். அவர்களுக்குச் சொத்தும் வைத்து இருக்கிறோம். நம் கடமை தீர்ந்தது.

நீ போன ஆண்டு காசு மாலை போட்டுக் கொள்ள ஆசை யிருக்கிறது என்றாய். வெள்ளை மாட்டை விற்றேன்! காசு மாலையோடு கல்லிழைத்த ஓலையும் வாங்கிக் கொடுத்தேன்.