வெள்ளிக்கிழமை இரவு நீ நோயாய்க் கிடைக்கையில் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். எனக்கும் எல்லாம் இருக்கிறது என்று மகிழ மகிழ சொன்னது உண்டு. இந்த உடம்பு என்றும் இருக்கப் பண்ணலாம். ஏன் என்றும் இருக்க வேண்டும்? நல்லபடியாய் ஏன் சாகக்கூடாது? என்று முடித்தான். அவள் சொன்னது இதுதான் : இன்னும் எதற்கு இங்கு இருப்பது? சாக வழி சொல்லுங்கள். நானும் கூடவே வந்துவிடுகின்றேன் என்றாள். அதற்கு அவள் விளம்புவான். சாகவழி நாமே வகுப்பதில்லை. தானாக ஏற்பட வேண்டும் சாவு ஏற்படும்படியான நல்ல காரியத்தை செய்துவிட வேண்டியதுதான் நம் கடன். இவ்வாறு இருவரும் சாகத்துணிவதைப் பற்றிக் காலைவரை பேசி ஒரு முடிவுக்கும் வந்துவிட்டார்கள். வேங்கையின் ஆள் முத்து, கணக்காயர் வீட்டுக்கு வந்து, அதோ பாரும்! சிற்றெறும்பின் சாரைகள் போல ஆயுதத்தோடு ஊரார் ஆலடிக்க போகின்றார்கள். நீங்களும் எழுந்திருங்கள் என்றான். கணக்காயரும், மனைவியாரும் தங்கள் முடிவுப்படி நாங்கள் வரமுடியாது என்று பட்டு கத்தரித்ததுபோல் சொல்லி விட்டார்கள். முத்து கேட்டான் : | ஊர் ஓடும்போது ஒடவேண்டாமா? | | | கணக்காயர் : | ஒடவேண்டாம் | | | முத்து : | ஆலமரம் வெட்ட வேண்டாமா? | | | கணக் : | வேண்டாம் |
|