சனிக்கிழமை ஒருத்தன் இறந்துவிட்டான். அந்தக் கண்மூடிச்சாமி துணைப்பிணம் தேடாதிருக்க என்னுடன் பிறந்த கோழிக்குஞ்சைப் பிணத்தோடு கட்டி அனுப்பி விட்டார்கள். ‘நான் தனி; என்னைச் சாமிதான் காப்பாற்ற வேண்டும்’-காக்கைக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அது சொல்லுகிறது : ‘அட இழவே, உன் பெற்றோரையும் உடன்பிறப்பையும் வாயிற் போட்டுக்கொண்ட சாமியா உன்னைக் காப்பாற்றும்? ‘வந்து விடு என் வயிற்றுக்குள், கோழிக்குஞ்சே’ என்று கூறிற்று காக்கை! குஞ்சு-நான் பிழைத்திருக்க ஆசையாய் இருக்கிறது. காக்கை-உனக்கு ஆசைதான்! சாமிக்கு? நான் யார் தெரியுமா! சனியன் சாமி ஏறுஞ்சாமி. காக்கைச் சாமி, ஏழைக் குஞ்சை ஒழித்துவிட்டது. ஏ. சி. -9 |