பக்கம் எண் :

128ஏழைகள்

26
உனக்கு ஆசைதான்! சாமிக்கு?


கொட்டைப்பாக்கு அளவு தலை. கொய்யாக்காய் உடல்-இந்தச் சிறிய கோழிக்குஞ்சு குப்பையில் மேய்ந்திருந்தது.

அது தனி; தாயுமில்லை, தகப்பனுமில்லை. உடன் பிறந்தாருமில்லை. தன்னந்தனியே மேய்கிறது. குப்பை சீய்க்கவும் தெரியவில்லை; இரை விழுங்கவும் முடியவில்லை.

காக்கை ஒன்று அதை அடித்துக்கொண்டு போக அணுகிற்று. அதன் நிலையைக் கொஞ்சம் ஊன்றி நோக்கியது. காக்கையின் நெஞ்சும் இளகிற்று.

காக்கை, கோழிக்குஞ்சை நோக்கி-‘ஏன் குழந்தாய்! உன் தாய், தந்தை, கூடப் பிறந்தவர் எங்கே?’

கோழிக்குஞ்சு சொல்லுகிறது : ‘என் தகப்பனைச் சாமிக்கு விட்டிருந்தார்கள். அதனால் ஒரு நாள் சாமிக்கு அறுத்து விட்டார்கள்’.

புதையல் கிடைத்தது, ஒருவருக்கு. அந்தப் புதையலைக் காத்திருந்த சாமிக்கு என் தாயை அறுத்தார்கள்.