சிலர் : | ஐயா, அந்தம்மா உன்னை விலக்கவில்லையே! அந்தம்மா உனக்குச் செய்ததுதான் என்ன? பொத்தற் செம்பில் பால் வைத்ததாய்ச் சொல்லுகிறாய். தாயினிடம் காட்ட வேண்டிய மரியாதை, அன்பு, பொறுப்பு ஒன்றுமே கிடையாது. |
சங்கரனுக்குக் கோபம் வந்து விட்டது. உங்களை எல்லாம் ஞாயம் கேட்க வரவில்லை என்று கூறினான். ஊராருக்கு உணர்ச்சி சிறிது உண்டாகி வருவது பற்றி அவனுக்கு ஏற்பட்ட வருத்தம் சொல்ல முடியாது. பஸ் ஊருக்கு வந்து சேர்ந்தது. தாய் வீட்டில் நுழைந்தாள். தான் தன் பிள்ளைக்குப் பால்வைத்த செம்பு அப்படியே மேஜை மேல் இருந்தது. அதில் தண்ணீரை ஊற்றி பரிசோதித்தாள். செம்பில் பொத்தல் இல்லை. இனி மேலாவது தேசீயப் பத்திரிகைகள் சங்கரன்போல் இராமல் தமிழ்நாடு என்னும் தாயின் மட்டில் பொறுப்போடும் அன்போடும் தொண்டு செய்க) |