பக்கம் எண் :

132ஏழைகள்

ஒருநாள், பத்து மான்களும் நரியிடம் போயின. அப்பொழுது நரி தன் மனைவியிடம் குகையில் பேசிக் கொண்டிருந்தது. மனைவி நரி கேட்டது : “அடிக்கடி இந்தப் புள்ளிமான்கள் பத்தும் உம்மிடம் ஏன் வர வேண்டும்?”

அதற்குக் கணவன் நரி, ‘பத்து மான்களைக் கொண்டு பல்லாயிர மான்களையும் ஒழிப்பது, பிறகு பத்து மான்களை ஒழிப்பது, என் திட்டமிது. முள்ளை முள்ளாலேயே களைய வேண்டும் என்று பதில் சொல்லியது. இதையெல்லாம் அங்கு வந்து காத்திருந்த மான்கள் எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தன. நரியைப் பார்க்கவும் அந்த மான்களுக்குப் பிடிக்க வில்லை. திரும்பிப் போய்விட்டன.

அன்றைக்கே அந்தப் பத்து மான்களும் காட்டு மான்களை யெல்லாம் கண்டு தாம் இதுவரை செய்த ஐந்தாம்படை வேலைகளுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டன.

எங்கும் இச்செய்தி பரவிவிட்டது. மான்கள் எல்லாம் ஒத்துப் போயின என்று நரி கேள்விப்பட்டது. நடுங்கிப் போய் விட்டது. தன் மனைவியை அழைத்துக் கூறியது. எப்போதும் தலைமாட்டில் காத்திருக்கிறது நமக்கு சாவு, பத்து மான்களை வைத்துக்கொண்டு நாம் பண்ணியதெல்லாம் வெளியாகிவிட்டது. இப்பொழுது பத்து மான்கள்கூடக் காட்டுமான்களிடம் சேர்ந்து விட்டன. சாவு! சாவு!

மனைவி நரிக்கும் நடுக்கம் வந்து விட்டது. ஆம்! எப்போதும் நமக்குச் சாவு வரலாம். இப்போது வரலாம்; இந்த மணி நேரத்திலேயே ஏற்படலாம் சாவு. சாவு, ஆம்! பெரும்பான்மையினரைப் பகைத்தோம். நாம் இரும்பு உடல் படைத்தாலும் முடியாது. சாவு! சாவு!

மான்கள் ஒன்றும் செய்யவில்லை, அந்த அதிகார நரியை,

நரி இறந்து கிடந்தது, பெட்டை நரியுடன்.