பக்கம் எண் :

138ஏழைகள்

வந்தாள். ஆனால் அவள் கர்ப்பவதியாகி, ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து விட்டாள். அந்தக் குழந்தை அவளுக்கு இழைத்த தீமையை என்னவென்று சொல்வது! அவள் சொல்லுகிறாள், அந்தக் குழந்தையைப் பார்த்து.

‘அருமைப் பாலகனே! நானும், உன் தந்தையுமாகிய-காதலர் இருவரும் பாலும், நீருமாய் இருந்தோம். பூவும் மணமுமாயிருந்தோம். சொல்லும் பொருளுமாயிருந்தோம், உயிரும் உடம்புமாயிருந்தோம், கரும்பும் சுவையுடைய சாறுமாய் இருந்தோம், எள்ளும் எண்ணெயுமாயிருந்தோம். இவ்வாறு ஒருமனப்பட்டு இருந்துவந்த எமக்கு நீ அன்னமும், கரும்பும் (வண்டும்) புலவரும், யமனும், ஆலையும், செக்குமாய்த் தோன்றி விட்டாய்’ என்று கூறுகிறாள். அச்செய்யுள்.

அரும்பா லகாமுனம் பூமணம் சொற்பொருள் ஆகம்உயிர்
கரும்பாஞ் சுவைஎள்ளும் எண்ணெயும்போல் ஒத்த காதலரைப்
பெரும்பாலில் நல்லன்னம் கங்காசலத்தைப் பிரிப்பது போல்
கரும்பாம்புலவர் எமன்ஆலை செக்கெனத் தோன்றினையே!

இதனால் அந்தத் தாயின் மனோபாவம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

இளங்குழந்தையை உடைய அன்னை காதல் இன்பத்தை தற்காலிகமாக இழந்து போயிருந்தாலும் அதைவிட அப்பனாக புத்திரப்பேறு அவளுக்கு அளவற்ற இன்பத்தைத் தருகிறது-இந்த மனோபாவத்தை விளக்க வந்ததுதான் இந்தப்பாட்டு.

இவ்வித இனிய-பொருட்செறிவுள்ள கவிதை தருவதில் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் ஓர் உயர்நிலையை அடைந்து விடுகிறார்.