பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்137

29
பாலனைப் பழித்தல்


பூவோடு சேர்ந்துள்ள மணத்தைப் பிரிக்க முடியாது என்று நினைக்காதீர்கள். வண்டு இரண்டையும் தனித்தனியே பிரித்து விடுகிறது. எப்படி? வண்டு தேனைப் பூவிலிருந்து எடுத்துவிடுகிறது. அதனால் அப்பூவுக்கு மணமிருந்தும் பயனில்லை. கீர்த்தி இழந்து போகிறது; கொள் வாரில்லாமல் வாட்டமடைகிறது; மணம் விலகுகிறது. சொல்லும் அதன் பொருளும் பிரிக்க முடியாதென்று கருதி விடாதீர்கள். புலவர்கள் சொல்லை எடுத்துக்காட்டி அதன் பொருளைப் பிட்டுப்பிட்டு வைத்து விடுகிறார்கள்.

உயிரையும், உடம்பையும் பிரிக்கத்தான் எமனிருப்பது உங்கட்குத் தெரியும். கரும்பையும் அதன் சுவையாகிய சாற்றையும் பிரிப்பது எது? ஆலை. எள்ளில் எண்ணெய் கலந்திருக்கிறது. அந்த ஒற்றுமையைப் பிரித்து எண்ணெய் வேறு பிண்ணாக்கு வேறாகப் பிரிப்பது செக்கு. இன்னும் பாலோடு சேர்ந்த நீரையோ அன்னம் பிரித்து விடுகிறது;

இவைகளை ஏன் சொல்லுகிறேன் என்றால், ஒரு மங்கை தனது காதலனோடு இன்பத்தை இடையறாது அனுபவித்து