பக்கம் எண் :

140ஏழைகள்

சொற்பொழிவாற்றாத தமிழ்ப்புலவரே தமிழ்நாட்டில் இல்லை” என்று சொல்லும்படி ஆயிற்று. ஆண்டு விழா மூன்றுநாள் நிகழ்ச்சியாக மிகச் சிறந்த முறையில் கொண்டாடப்பெற்றது. ஊர் மக்கட்குத் தமிழ்க்கழகம் என்றால் கற்கண்டு. அப்படி ஒரு கழகமும் இதுவரை ஊராரின் நெஞ்சைக் கவர்ந்திருக்க முடியாது. தமிழ்க் கழகத்தார். தம் கழகத்தின் சார்பில் ஒரு தமிழ் விடுதி ஏற்படுத்தத் திட்டம் போட்டார்கள். உயர் வகுப்பில் நுழையும்படி மாணவர்கட்குப் பயிற்சியளிப்பதுதான் தமிழ் விடுதியின் நோக்கம்.

சரியாக நாற்பது மாணவர்கள் தமிழ் வீடுதியில் சேர்ந்தார்க்ள். மூன்று ஆசிரியர்களைச் சம்பளத்திற்கு அமர்த்தினார்கள். கழகத்தார். வகுப்புக்கள் சிறப்புடன் நடந்து வந்தன.

மாதக் கடைசியில், கழகத்தார் கேட்பதற்குள், மூன்று ரூபாய் விழுக்காடு நாற்பது மாணவரும் நூற்றிருபது ரூபாயைக் கொண்டு வந்து குவித்தார்கள். கழகத்தார் அனைவர்க்கும் ஒரே மகிழ்ச்சி!

கழகத்தின் ஆசிரியர் மூவரில் வீராசாமிப் புலவர் குறிப்பிடத் தகுந்தவர். நிறைந்த தமிழ்ப்புலமை, பயிற்றுமுறை பண்பு, ஒழுக்கம் எதிலும் குறைந்தவரல்லர்; மாதம் பிறந்து ஐந்து தேதியும் ஆய்விட்டது. எட்டாந்தேதி சம்பளம் வந்துவிடும் என்று தமிழ் விடுதியின் ஆசிரியர்களில் இரண்டுபேர் பேசிக்கொண்டார்கள். அதற்கு முன்பே சம்பளம் கைக்கு வந்துவிடும் என்று வீராசாமிப் புலவர் நம்பினார். கழகத்து இளைஞர்கள் உணர்ச்சியுள்ளவர்கள்-தமிழ்ப்பற்றுமிக்கவர்கள்.

ஆறாம் தேதி இரவு பத்து மணியடித்தது. வீராசாமிப் புலவர் குடும்பம், பசியின் நிலைக்க முடியாத ஆழத்தில் முழுகிற்று. அந்தத் துன்ப நிலையிலும் புலவருக்கும் அவர்