பிரஞ்சு மொழிக்குக் கொடுக்கும் சம்பளத்தைப்போலவே தமிழுக்கும் கொட்டிக் கொடுக்கிறார்கள். இங்ஙனம் தங்கள் அன்புள்ள கழகத் தலைவர்! பேச்சு முடிந்தது; நடுங்கும் நெஞ்சம், நாலேகால் ரூபாயை எடுத்துக்கொண்டு தள்ளாடி நடந்து சென்றது. வெளியில் வண்டிக்காரன். காத்திருந்ததற்கு இரண்டு பணம் பிடுங்கிக் கொண்டுபோனான். அவன் நல்லவன்! புலவர் எட்டாந்தேதி வரைக்கும் கழகத்திற்கு வரவில்லை; எட்டாந்தேதி மாலை, ‘புலவர் இனித் தமிழ்க்கழகத்துக்கு மட்டுமன்றி எந்தக் கழகத்துக்கும் வரமுடியாது’ என்று தமிழ்க்கழகத்தார் கேள்விப்பட்டார்கள். தமிழ்க்கழகத்தினர், உலக மக்கள் நிறைந்த பெருங் கழகத்திலிருந்து வேறு புலவரைத் தேடுகின்றார்கள். அவர்கள் உணர்ச்சியுள்ள இளைஞர்கள்! தமிழ்ப்பற்றுள்ள இளைஞர்கள்! (முற்றும்) |