மாடு வாங்கிவர என்னை அனுப்பினீர்கள். அது ஒரு நாளும் சேர்ந்தால் பதின்மூன்று நாட்கள் போகப் பதினேழு நாட்கள் வகுப்பு நடந்தது, என்று புலவர் பதில் சொன்னார். தலைவர் பொருட்காப்பாளருக்கு கீழ்வருமாறு கட்டளைப் பிறப்பித்தார்; “கால் ரூபாய் விழுக்காடு பதின்மூன்று நாளின் தொகையைக் கழித்துக்கொண்டு மீதியைப் புலவரிடம் கொடுத்துக் கையொப்பம் பெற்றுக் கொள்ளுங்கள். ” பொருட்காப்பாளர் பிரஞ்சு நன்றாகப் படித்தவர்! மொத்தச் சம்பளத் தொகையைப் பணமாக்கி அதில் பதின்மூன்று நாளில் மொத்தத் தொகையைக் கழித்து மீதியை எட்டால் வகுத்து ரூபாயாக்கி எதிரில் வைத்தார். புலவர் நாலேகால் ரூபாயைப் பார்க்கிறார் உற்று. ‘அப்படியானால் எனக்கு மாதச்சம்பளம் ஏழரை ரூபாயா?’ என்று வியப்போடு கேட்டார் புலவர்! ‘நூறாயிர ரூபாய் சொத்துள்ள முற்போக்கு மன்றத்தில் உம்போன்ற புலவர் வகுப்பு நடத்துவதற்கு ஆறு ரூபாய் தானே கொடுக்கிறார்கள்’ என்றார் தலைவர்! ‘நான் கூடுதலாக எதிர்பார்த்தேன்’- இது புலவர் சொன்னது. ‘ஏழரை ரூபாய் அதிகம் என்பது எங்கள் கருத்து’ -தலைவர் சொன்ன பதில் இது. இங்கு ஆட்சி செலுத்தும் பிறநாட்டார், உங்களைவிட அதிகமாக மதிக்கிறார்கள் தமிழை! - இப்படிக்கு வீராசாமிப் புலவர்! பிறநாட்டினர், தம் பிரஞ்சு மொழிபோலவே எண்ணுகிறார்கள் தமிழையும். அவர்கட்கு என்ன தெரியும்? ஆதலால் |