புலவர் : | “காலையில் பார்த்துக் கொள்ளலாம். வண்டி கிடைக்கும். ” “மறுநாள் காலையில் எதிர்பார்க்கும் இன்பத்தை. ;” நினைத்த புலவரும் மனைவியும் அந்தத் துன்ப இரவிலும் தூங்க முடிந்தது. |
கழகத் தலைவரும் பொருட்காப்பாளரும் அலுவலை முன்னிட்டு வெளிச்செல்லுமுன் புலவர் அவர்களைக் கண்டார். அவர்கள் கழகக் கட்டிடத்தில் போயிருக்கும்படி சொன்னார்கள் புலவரை. காலை எட்டுமணி அடித்துவிட்டது. வழக்கப்படி வகுப்புக்கள் தொடங்கின. புலவர் அந்த வண்டியை அனுப்பிவிட்டார், நடுப்பகல் பன்னிரண்டு மணிக்கு வரச்சொல்லி! வண்டிக்காரன் நல்ல மனிதன்! பன்னிரண்டு மணிக்குத் தலைவர் பூசையில் இருந்தார். பொருட்காப்பாளர் புதிய வெளியீடு ஒன்றைக் கருத்தாகப் படித்துக் கொண்டிருந்தார், சாப்பிட்டபின். ஒரு மணியாயிற்று : கழகத்தின் தலைவரும் பொருட்காப்பாளரும் சிறிது நேரம் ஓய்வுவெடுத்துக் கொண்டார்கள் என்று செய்தி கிடைத்தது புலவருக்கு. ஒய்வு என்பது அவர்கள் தூங்குவதின் பெயர். இரண்டு மணிக்கு வகுப்புக்கள் தொடங்கின. மாலை ஆறு மணிக்குத் தலைவரையும் பொருள்காப்பாளரையும் கழகக் கட்டிடத்தில் புலவர் காண முடிந்தது. தலைவர் புலவரைக் கேட்டார் : “இந்த மாதத்தில் வகுப்பு எத்தனை நாட்கள் நடந்தன” என்று. ‘ஆயுத பூசைக்காக ஒன்பது நாட்கள் வகுப்பு இல்லை. கழகத்தில் வடக்கத்தியார் இறங்கி இருந்ததால் மூன்று நாள் வகுப்பு நடக்கவில்லை. மதகடிப்பட்டுச் சந்தைக்குப் போய் |