பக்கம் எண் :

56ஏழைகள்

 

பிறகு மூளை ஒழுங்கடையும் அடையாது என்பதை தெரிவிக்கின்றேன்.

  

ஆஸ்திகர் :

ஓய்! எடுங்காணும் உமது ஆயுதத்தை-மருந்தை! மகா வைத்தியர்! உமக்குத்தான் மூளையில்லை! அந்த ஆயுதத்தையும் மருந்தையும், உமக்கே உபயோகப்படுத்திப் பார்க்கின்றேன். உமது கத்தியாலேயே இப்போது ஆப்ரேஷன் பண்ணாமல் விடப்போவதில்லை! அப்போதுதான் உமது கிண்டல் உம்மை விட்டு நீங்கும்.

  

டாக்டர் :

நானே கிண்டல்காரன்தானே! என்னை விட்டுக் கிண்டல் எப்படித் தொலையும்? இந்தாரும், எனது ஆயுதப்பெட்டி?

ஆஸ்திகர் பெட்டியை வாங்கித் திறந்து பார்க்கையில் கட்டுக்கட்டாகப் பிரசுரம் இருந்தது. கூட்டத்தினர் தலைக்கொன்றாக எடுத்து வாசிக்க ஆரம்பித்தனர்.

பிரசுரத்தில் கண்ட விஷயம் வருமாறு 5-3. 31 காலை வெகு சிரமப்பட்டுப், புதுவைக் கடற்பாலத்தின் மேல், புதுவை முரசு கிண்டற்காரனால் கூட்டப்பட்ட பொதுக்கூட்ட முடிவில் ஸ்ரீ கிண்டற்காரன் வெளியிட்ட,

பிரசுரம்

வாழைமரத்தின் தண்டின்மேல் பட்டைகள் அடுக்கடுக்காகச் சேர்ந்திருப்பதுபோல், இந்து மக்கள் எனப்படுவோரின் மூளையில், கடவுட் குளறுபடியும், மதப்பைத்தியமும் ஆகிய படலங்கள் மூடியிருக்கின்றன. நம்மிடம் சில மரியாதை மருந்து இருக்கிறது. தின்னக் கசப்பதுபோல் இருக் கும். பத்தியம், தேசபக்திதான். ஒரே வேளையில் குணம் தெரியும். பேரைச் சொன்னாலே நெற்றிக்குறிகள் பறக்கும்! மூளையிலுள்ள கோளாறு தீரும் வரைக்கும், நெற்றிக்குறிகள் கிளைக்கும்! கிளைக்கும்! ஆபாசமும் போகமாட்டா!

தங்கள்
கிண்டற்காரன்

கரகோஷத்தோடு கடற்கரை

கூட்டம் முடிந்தது.