ஆஸ்திகர் : | டாக்டர், உமது யோசனையே யோசனை. நீர் ஓர் அந்நிய நாட்டினராயிருந்ததால், உம்மை அதிகமாய்க் கிண்டல் பண்ணிவிட மனம் வரவில்லை. அமெரிக்கரும், உம்மைப்போல்தான் இருப்பார்கள்? இன்னொரு பந்தயம் கட்டுகிறீர்களா? அதாவது நீர் எம்மில் ஒருவருடைய மூளையைப் பரிசோதியுங்கள். ஒழுங்கான மூளையைக் குறிப்பிடுங்கள். அதன்பிறகு அவருடைய நெற்றியில் நாமமோ, திருநீறோ ஏற்படுகிறதா இல்லையா, பார்ப்போம். |
| |
டாக்டர் : | ஆகா! அப்படியே! (கூட்டத்திலிருந்த எஸ். ஆர். வி. வர்களைக் காட்டி) இவருடைய மூளை ஒழுங்கான நிலையில் இருக்கிறது. இவருடைய நெற்றியில் நாமமோ திருநீறோ பார்க்கவே முடியாது! சுயமரியாதைக்காரர்கள் ‘சபாஷ்’ என்று ஆர்ப்பரித்தார்கள். (ஆஸ்திகர், மூன்றாம் பேஸ்து வைத்த மாதிரி விழித்தார்கள்) |
| |
ஆஸ்திகர் : | எம்மைக் கிண்டல் பண்ணுவதற்காகவா வந்தீர்! ஏன் ஓய் சுயமரியாதைக்காரன் மூளைதான் சரியான மூளை; மற்றவர்கள் மூளை சரியானதல்லவென்றா சொல்லிவிட்டீர்? உம், அப்படியானால் என் மூளையை நீர் ஒழுங்கு பண்ணமுடியுமா? |
| |
டாக்டர் : | உம்மை மாத்திரமல்லவே : உம்மைப் போன்றவர்களையும் ஒழுங்கு பண்ணத்தானே வந்திருக்கிறேன்! |
| |
ஆஸ்திகர் : | என் மூளையை ஒழுங்கு பண்ணாவிடில் உம்மை என்ன செய்வது? |
| |
டாக்டர் : | உமது மூளை ஒழுங்குபடாவிட்டால் அதைப்பிறகு பொருட்காட்சி சாலையில்தான் வைக்கவேண்டும்! நான், எனது ஆயுதம்! ஒளஷதம் இவைகளை உபயோகப்படுத்திப் பார்க்கின்றேன்! அதனால் உமது மூளைக்கும், உம்மைப் போன்றவர்களுடைய மூளைக்கும் என்னவித மாற்றம் உண்டாகிறது என்பதைத் தெரிந்து கொண்டு, |