பக்கம் எண் :

54ஏழைகள்

டாக்டர் :

ஏன் சொல்லுகிறேன் என்றால், இவ்விருவர் நெற்றியிலுமுள்ளகுறியானது தோலைப் பற்றியதாயில்லை. இன்னும் உள்ளேயிருந்து, அது தொடங்குகிறது? எலும்பைப் பற்றியதாயுமில்லை. இன்னும் உட்புறமிருந்து தொடங்குகிறது! ஊன்றிக் கவனித்தால், இக்குறிகளுக்கும் உள்ளிருக்கும் மூளைக்கும் சம்பந்தமிருக்கிறது!

(சுயமரியாதைக்காரரின் சிரிப்பு)

இதற்குள் ஆஸ்திகர் ஒருவர் எழுந்து அவ்விருவருடைய நெற்றிக்குறிகளையும் கலைத்துவிட்டு வெறும் நெற்றியோடிருந்த அவர்களையே டாக்டரிடம் காட்டி, ‘டாக்டரே, மூளைக்கும் குறிகளுக்கும் சம்மந்தமிருக்கிறதென்றீரே. அப்படியானால் இப்போது குறியில்லாமல் போக ஞாயமில்லையே? அதற்கு என்ன சொல்லுவீர்கள்?

டாக்டர் :

சொல்லுவதென்ன, நாளைக்கு உண்டாய் விடும்?

  

ஆஸ்திகர் :

(வெறும் நெற்றியுடனிருந்த இன்னொருவரைக் காட்டி) இவருக்குப் பல வருடங்ளாக நெற்றிக்குறிகள் இல்லை!

  

டாக்டர் :

இருக்கலாம். அவருக்கு மூளை ஒழுங்கான நிலையடைந்து விட்டது!

  

ஆஸ்திகர் :

(உடனே அதே மனிதர் நெற்றியில் ஒரு பெரிய நாமத்தைப் போட்டுக் காட்டி) டாக்டரே ஒழுங்குபட்ட மூளையுடையவருக்கு, இதோ குறி ஏற்பட்டு விட்டது. இப்போதாவது மூளைக்கும் குறிக்கும் சம்பந்தமில்லை என்று ஒத்துக் கொள்கிறீரா?

  

டாக்டர் :

அதெப்படி? மூளையில் சிறிது முளையிருந்திருக்கும் நாமம் முளைத்து விட்டது.

(சுயமரியாதைக்காரர்களின் சந்தோஷ ஆரவாரம்)