பக்கம் எண் :

58ஏழைகள்

ஆலயத்தில் நுழைந்தான். அவன் மூலஸ்தானத்தில் நுழைந்ததையும் ரெட்டியார் இரண்டு கண்களாலேயும் பார்த்தார். மூலஸ்தானம் திறந்திருந்தது. விளக்கும் எரிந்து கொண்டிருந்தது. பரபரப்போடு, ‘ஐயரே, ஐயரே! மூலஸ்தானத்தில் திருடன் வந்து நுழைந்தான். அவனைப் பிடியுங்கள் என்றார். மூலஸ்தானத்தில் பார்ப்பனரல்லாதவர் போகக்கூடாதல்லவா?

ஐயர், ‘என்ன ரெட்டியார்வாள்! நான் தான் இருக்கிறேன். பெருமாள்தான் இருக்கிறார் தினம் இப்படித்தான் பலர்வந்து கேட்கிறார்கள். விஷயம் இன்னதென்று புரியவில்லை. காற்று சேஷ்டையாய் இருக்கலாம் அந்தக் காற்றானது கோயில் மூலஸ்தானத்தில் நுழைவது விந்தை’ என்றார். ரெட்டியாரின் சந்தர்ப்பம் சாஸ்திரத்தை மீறச் செய்துவிட்டது.

அவர் உடனே மூலஸ்தானத்தில் நுழைந்து திருடனைத் தேடினார். திருடன் இல்லை. உள் நுழைந்தவன் தப்பியோட வேறு வழியுமில்லை. திகைப்படைந்த ரெட்டியார் வீட்டிற்குத் திரும்ப வேண்டியதுதான் பாக்கி. ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மற்றும் அநேக ரெட்டியார், போலீஸ்காரர் அங்கு வந்து சேர்ந்தார்கள். மூலஸ்தானத்து ஐயர் வெளியிற் போகாமலும், வெளிமனிதர் மூலஸ்தானத்திற்குப் போகாமலும் காப்பு ஏற்படுத்தப்பட்டது. பிறகு மூலஸ்தானம் நன்றாய்ச் சோதிக்கப்பட்டது. மேலும் ஆராய்ச்சி மற்றும் நடவடிக்கை! ஒன்றும் பயனில்லை. திருடன் கோயிலின் மூலஸ்தானத்திற்குள் புகுந்தான் என்பதே சுத்தப் பொய் என்று ஏற்பட்டது. ஆனால் இம்முடிவு ஜனங்களுடையது. பறி கொடுத்த ரெட்டியாருக்கோ கெட்ட காற்றின் மேல் (பசாசின் மேல்) அதிக சந்தேகம். சில நாட்கள் சென்றன.

பெத்த பெருமாள் என்ற தொடரில் பெத்த என்பது தெலுங்குப் பதம், பெரிய என்பது அதன் அர்த்தம். அந்தப்