பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்59

பெரிய பெருமாள் விக்ரகம் மிகப் பெரியதுதான். அது கிடந்த கோலமாய்ச் செய்யப்பட்டிருக்கிறது. 50 வருடங்கட்கு முன் அது பூமியில் கிடைத்தது. அப்போது-தற்கால அர்ச்சகப் பிராம்மணரின் தகப்பனார் இருந்தார். அவர் செத்துப்போன பின் தற்காலத்தார் அமைந்தார். பெரிய நாராயண ஐயங்கார்.

சனிக்கிழமை வந்தது. காலை 10 மணி. கோயிலில் கூட்டம். நாராயண ஐயங்கார்-பெத்த பெருமாளுக்கு அர்ச்சனை பண்ணுகிறார். ஐயங்கார் வீட்டைப் பரிசோதனை செய்த சர்க்கார், கோயிலுக்குள் புகுந்தார்கள். வெள்ளைக்கார உத்தியோகஸ்தர் உட்பட! ஓர் உத்தி யோகஸ்தர், ‘ஐயங்கார் சுவாமிகளே! மூலஸ்தானத்தைப் பரிசோதிக்க வேண்டும்’என்றார். இது பயனற்ற வார்த்தை. ஐயர் சாத்திரம் படிக்கத் தொடங்கினார். சர்க்கார் உட்புகுந்து ஆராயத் தொடங்கினார்கள். பக்தர்கள் முணுமுணுத்தார்கள். அர்ச்சகர், ‘அக்ரமம் அக்ரமம்’ என்றார். சர்க்கார் செய்கை அனைவராலும் கண்டிக்கப்படுகிறது. உண்மையறிவதே நோக்கமாக வந்த உத்தியோகஸ்தர்கள் மேலும் சொன்னதாவது.

பெத்த பெருமாள் விக்ரகத்தின் உட்புறத்தை ஆராய வேண்டும்.

இதற்கு, பெத்த பெருமாள் கடவுள் என்று மாத்திரம் அறிந்துள்ள ஜனங்கள், ‘சாமியை உடைப்பதோ! ’-என்று சொல்லி வருந்தினர்.

பிறகு, பெத்தபெருமாளின் தலை திருகப்பட்டது. திருவயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட சாமான்கள், நோட்டுகள், நகைகள், கத்திரிக்கோல் ஒன்று, 6 தோட்டா போட்ட ரிவால்வர் ஒன்று; கடைசியாய்க் களவுபோன ரெட்டியார் வீட்டுப் பணமுடிப்பு. இதன்பின் பக்தர்களின் கோபத்திலிருந்து ஐயங் காரைக் காப்பாற்றுவது அருமையாகி விட்டது.