பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்91

நடைபெற்றது. ‘வேலனுக்கு விண்ணப்பம்’ என்ற படத்தின் முதலாளியும் மற்றும் குறிப்பிடத்தக்க பலரும் வருகை தந்து அரங்கேற்று விழாவைச் சிறப்பித்தார்கள்.

‘வேலனுக்கு விண்ணப்பம்’ என்ற பட முதலாளி தங்கத்திற்கு ஓர் உறுதி கூறினான்-“நான் எடுக்கப்போகும் அடுத்த படத்தில் நீதான் தலைமை நாட்டியக்காரி”.

‘சேயிழையின் சிரிப்பு’ என்ற கதையின் படிப்பிடிப்பு நடைபெறுகின்றது. சோடிப்பு அறையினின்று தங்கம் வெளிவருவதை முதலாளி ஆவலுடன் எதிர்பார்த்து நின்றான். தங்கம் வந்தாள்; அவள் முன்படத்தில் பொன்னம்மா போலவே சோடிக்கப்பட்டிருந்தாள்.

பட முதலாளி, சற்றுநேரம் சொக்கி நின்று மிக்க நன்று என்றார். அதே நேரத்தில் படம் இயக்குவோன். ‘தங்கச்சி ஓடு உள்ளே’ என்று அதட்டினான். தங்கம் சோடிப்பு அறைக்குள் ஒடி மறைந்தாள்.

சோடிப்பவனை “வேலு! வா இங்கே” என்றான். அவன் எதிரில் வந்து நின்றான்-“யார் இப்படிச் சோடிக்கும்படி உனக்குச் சொன்னவர்?” என்று கேட்டான். அதற்கு அவன் முதலாளியைக் காட்டினான்.

முதலாளி அதே சோடிப்பவனைநோக்கி, முன் படத்தில் பொன்னம்மாவுக்கு அப்படிச் சோடிக்கச் சொன்னவர் யாரென்று கேட்டான். அதற்குச் சோடிப்பவன் படம் இயக்குவோனைக் காட்டினான்.

படம் இயக்குவோனுக்கு கோபம் பொத்துக்கொண்டு எரிச்சல் கிளம்பிவிட்டது. அவன் முதலாளியை நோக்கி, “ஐயா, முதலாளியாரே, தங்கம் என் தங்கை. அவளுக்குமா இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க சோடிப்பு?”

எண்ணத்தில் ஆழந்து எழுந்த முதலாளி படம் இயக்குவோனை நோக்கி, “ஐயா, படம் இயக்குவோரே தங்கம் உங்கள் தங்கை. பொன்னம்மா?”