17 புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையான்
புலவர் ஒருவருக்கு இயற்பெயரே மறைந்துவிட்டது. அவரைத் தெருவாரும் ஊராரும் முண்டைக்கண்ணி ஆம்படையான் என்றே அழைப்பார்கள். முண்டைக்கண்ணி ஆம்படையான் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு இட்டளியும், சுவைநீரும் உட்கொண்டு மைலாப்பூருக்குச் செல்லுவார். மைலாப்பூரில் அவர் நுழையும் தெருவுக்கு வடக்குமுனை தெற்குமுனை உண்டு. அவர் வடக்கு முனையில் நுழைந்தால் அவருக்கு முதலில் கிடைப்பது பணக்காரர் பழனியாண்டி வீடு; தெற்கு முனையில் நுழைந்தால் பார்ப்பனர் பஞ்சு வீடு. இரண்டு வீடுகளும் அண்டையில் அமைந்தவை. புலவர் பார்ப்பனரிடம் ஐயர் என்பதன் பொருள் மேலானவர். ஐ என்பது மேன்மை. அது பலர்பால் இறுதிநிலையாகிய அர் பெற்று ஐயர் என முடிந்தது என்பார். அவரிடம் |