பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்93

ஆக வேண்டியதை முடித்துக் கொண்டு பணக்காரரிடம் (பழனியாண்டி) வருவார். ஐயர் என்றால் பிச்சையெடுப்பவர் ஐயம் பிச்சை; அது அர் பெற்று ஐயர் ஆயிற்று என்று கூறி ஆக வேண்டியதை முடித்துக்கொண்டு போவார்.

இன்னொரு நாள் பார்ப்பனரிடம் ஐயர் என்ற சொல் ஆரியர் என்ற சொல்லின் திரிபே என்பார். அதே தொடர்பாகத் தமிழரிடம் ஓடி ஐயர் என்ற தமிழ்ச்சொல்லுக்கும் ஆரியருக்கும் தொடர்பே இல்லை என்பார்.

மற்றொரு நாள் சொல்வார். தமிழ் ஆரியத்தின் பிள்ளை என்பார். பார்ப்பனரிடம் அவரால் ஆகவேண்டியதைப் பெற்றுக்கொண்டு கையோடு கையாகத் தமிழரிடம் வந்து, ஆரியம் தமிழின் குழந்தையே என்று ஆதாரம் காட்டி ஐந்தோ பத்தோ வாங்கிக் கொண்டு போவார்.

ஒரு பல்கலைக் கழகத்தில் தலைமைப்புலவர் இடம் மிகுதிப் பட்டதைக் கேள்விப்பட்ட முண்டைக்கண்ணி ஆம்படையான் ஐயரிடம் சென்று அந்த இடத்தை முடித்துவைக்க வேண்டும் என்றார். ஐயரும் ஒத்துக் கொண்டார்.

மறுநாள் புலவருக்கு கண்நோய் கண்டுவிட்டது. இரண்டு கண்ணுக்கும் மருணீக்கியார் மருந்திட்டுக் கண்களுக்கும் கறுப்புத்திரை போட்டனுப்பினார். புலவர் வண்டியேறி மைலாப்பூர்த் தெருவின் வடக்கு முனையில் நுழைந்தார். உட்காருமுன்னே தம் அரிய கண்டுபிடிப்பை வெளியிடத் தொடங்கி, ‘என் ஆராய்ச்சியில் தமிழர் என்போர் பார்ப்பனருக்குப் பிறந்தவர் என்றே விளங்கி விட்டது’ என்றார்; அவர் நுழைந்த வீடு பார்ப்பனர் வீடு அன்று; இவர் சொன்னது பார்ப்பனரிடத்தில் அன்று. இதைக் கேட்ட பழனியாண்டி தம் கையில் கிடைத்ததை எடுத்து அடி அடி அன்று அடித்தார். ‘பிச்சை எடுத்த நாயே’ என்று திட்டினார்.