பக்கம் எண் :

96ஏழைகள்

உன் தலைவியின் மலர்க்குழலின் தேனை உண்ணவோ? அல்லது தீங்கு பண்ணவோ-பார்! கருவண்டுகளில் பெரும்படை! நீ இப்படி ஓடு; அவளை மீட்பது என்பாடு!

வண்டுகள் புறம் போயின. முகில் விலகுவது போல அவள் இதழ்கள் விலகின. குளிர் நிலா வெளிப்பட்டது போல, அவள் குறுநகை தோன்றிற்று!

கடைக்கண்ணால் என்னைக் கட்டி அணைத்துப் புன்னகையால் புகன்றாளன்றோ ஒன்று! அதன் பொருள் என்ன?

நாணத்தை விலக்கி என்னை ஏறிட்டுக் காணத் துடித்தாளன்றோ! அதன் விலை என்ன?

என் இன்ப வாழ்க்கைக்குப் பெறத்தக்க ஒன்று! பெற்று விட்டேன். முற்றிற்று முதற் பிரிவு! மேலே?