29 வெட்டி விகடச் சக்கரம்
செப்டம்பர் 4-ந் தேதி வெளிவந்த விகடச் சக்கரத்தில் அதன் ஆசிரியர் பூதூர் வைத்தியநாதய்ய வீரசைவர் சு.ம. ஆள் தேவை என்ற தலைப்பின்கீழ், காரணமில்லாமல், வீணாக, “இஷ்டமுள்ளவர்கள் தமது நெற்றியில் சு.ம. என்று பச்சை குத்திக் கொண்டு ஹேர் கட்டிங் ஷாப்பினிடம் வந்தால் மற்ற விவரங்கள் சொல்லப்படும்” என்று முடித்திருந்தார். அதற்குச் சென்ற வார முரசில் விகட சக்கர ஆசிரியர் அம்பட்ட தொழிலையும், ஆசிரியத் தொழிலையும் ஏக காலத்தில் நடத்துவதெப்படி என்ற கருத்தில் பதில் எழுதப்பட்டிருந்தது. அதைப் பற்றி 11-ம் நாள் செப்டம்பர் விகடச் சக்கரத்தில் அதன் ஆசிரியர் ஒன்றுமே சொல்லாததால் இரு தொழிலையும் நடத்துவதென்பது உறுதியென்பது பெறப்பட்டது. என்ன செய்தார்கள்? மேற்படி 4உ செப்டம்பர் விகடச் சக்கரத்திலேயே அடியில் வரும் விஷயமும் காணப்பட்டது:- “பிரஞ்சு இலாக்கா புதுச்சேரி முதலிய ஊர்களில் பெரும் பணக்காரர்களைக் காட்டிலும் போக்கிரிகளுக்குச் சாயுகால் அதிகமாம்.” எந்த ஆதாரத்தைக் கொண்டு விகட சக்கர ஆசிரியர் இதை வெளியிட்டார்? போக்கிரி என்றால் காரணமின்றிப் பிறருக்குத் தொல்லை இழைப்பவர்கள் என்பதல்லவா |