அர்த்தம்? மேலும் புதுவையில் சாயுகால் உடையவர் அனைவரும் போக்கிரிகள் என்றல்லவா ஆகிறது? ஆதாரம் என்ன? ஆசிரியர் ஆதாரமும் காட்டிப் பேசவில்லை. பிரஞ்சிந்தியா என்னும் ஒரு தனிப்பகுதி மக்களைக் குறித்து நெஞ்சத் துணிவோடு பேச வந்தவர் ஆதாரம் நாட்டியிருந்தால் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு தனி மனிதனை இன்னொரு மனிதன் போக்கிரி என்று சொல்லிவிட்டால் போக்கிரி என்ற பட்டத்தை அவன் ஏற்குமுன் ஏனடா என்னைப் போக்கிரி என்கிறாய்? உன் பெண்டாட்டியைக் கையைப் பிடித்து இழுத்தேனா? உன் தலையில் மண்ணையள்ளிப் போட்டேனா என்ன காரணத்தைக் கொண்டு போக்கிரி என்கிறாய் என்று கேட்பானல்லவா? தனி மனிதனே அவ்வாறு காரணம் கேட்கையில் பிரஞ்சிந்திய மக்கள் ஆசிரியரைக் காரணம் கேட்காதிருக்க முடியுமா? ஆசிரியரை அப்படி ஏதாவது புதுவைச் சாய்காலுடையவர் செய்ததுண்டா? ஆசிரியர் வைத்தியநாதய்ய வீரசைவர் முட்டாள் என்றால் அவர் கோபிக்கக் கூடுமாதலால் நாம் சொல்ல விரும்பவில்லை. வாசகர்கட்கு வேறு சில விஷயம் சொல்லி நிறுத்துகிறேன். இந்நாள் வரைக்கும் பிரஞ்சிந்தியாவில் பிரிட்டிஷ் இந்தியத் தலைவர் கணக்கற்றவர்கள் குடும்ப சகிதம் தஞ்சமாகவும், வேறு காரணத்தாலும் தங்கியிருந்து போனதுண்டு. அவர்கள் பிரஞ்சிந்தியச் சாய்கால்காரர் போக்கிரிகள் என்று சொன்னதுண்டா? அது கொண்டு ஆசிரியர் இப்படி யெழுதினாரா? அல்லது ஆசிரியர் நேரில் வந்து அறிந்ததுண்டா? அல்லது வெட்டி விகடச் சக்கரத்தைப் புதுவையில் விற்றுத் திரியும் கனவான்கள் இப்படிப்பட்ட தகவல் தெரிவித்தார்களா? ஆம் எனில் அந்தக் காமாட்டியின் பேரை வெளியிட ஆசிரியர் சம்மதிக்கிறாரா? காரணம் வேண்டுமே! மேலும் விகடச் சக்கரம் 11உ செப்டம்பரில் புதுவை முரசுக்குப் போதம் என்ற தலைப்பில் ஆசிரியர் |