கூறியிருப்பதில் சிலவற்றை எடுத்துக்காட்டி, அதனதன் பக்கத்திலேயே எனது பதிலையும் எழுதுகிறேன். விகடச் சக்கரம் சொன்னது: மற்றைய நான்கு (தமிழ்நாடு இந்தியா திராவிடன் வீரபாரதி) பத்திரிகைகளிடம் நீ விரல் வைத்ததை நோக்கின் என்னென்ன விதமாகவோ எண்ண இடம் தருகிறது. நான் கூறுவது; என்னென்ன விதமாகவோ என்பதில் ஒரு விதத்தையாவது வெளியிட்டுச் சொல்லவில்லை. விரல் வைப்பதென்பது கொக்கோக ரீதியில் கரிகரலீலையாகும். சந்தர்ப்பமும் அவசியமும் ஏற்பட்டால் விகடச்சக்கரம், இந்தியா முதலியவைகளில் விரல் வைப்பதில் தயங்காதிருப்பது புருஷத்தனமாகும். விகட: ஷெ நான்கு தினசரிக்கும் உனக்கும் (புதுவை முரசுக்கும்) ஏணி வைத்தாலும் எட்டாது. நான் : ஆசிரியர் நிற்கட்டும்; அவர் தலைமேல் நான் நிற்கிறேன். அப்போது எட்டும் என்று நான் நினைக்கிறேன். விகட: அவலை நினைத்து உரலை இடிக்கிறீர். நான்: இல்லை, இல்லை! உம்மையே நினைத்து உம்மையே இடிக்கிறார்கள். விகட: மதுவினங்கள் மலிந்து தோன்றும் புதுச்சேரி - புதுவையில் மதுவினம் விதவிதமாக மலிந்திருப்பதற்குப் பிரிட்டிஷ் இந்திய மக்கள் அநேகர் காரணர். புதுவை டியூப்ளேக்ஸ் வீதியில் சிறிது நேரம் நின்று பார்த்தால் இது மெய் என்று தெரியும். இல்லையேல் புதுவைச் சாராயக்கடைகள் மூடப்படும். விகடச்சக்கரத்துக்கு இதில் சந்தேகமிருந்தால் ஆனந்த விகடனைக் கேட்டுப் பார்க்கலாம். புதுவையில் மது மலிவு என்பதை விகடச்சக்கர ஆசிரியர்கள் நன்றாய் அறிந்திருப்பது கொண்டு அவர்களுக்கு அவர்களின் |