பக்கம் எண் :

137

முதன் முதல் உன் வீட்டில் பிரசவ அறையில் உன் குழந்தையைக் கண்டாய். அதை உன் மனைவியின் அண்டையில்தான் பார்த்தாய். அப் பிள்ளையை ஈன்றவள் யார் என்பதை நீ யறிவாய். அவள் அதை ஈன்றெடுக்க உனது சம்பந்தம் இருந்தது என்பதையும் நன்றாய் அறிவாய்! ஆயினும், அக் குழந்தையை உண்டாக்கியவர் மாத்திரம் கடவுள் என்பதுதான் உன் நம்பிக்கை. சந்தோஷந்தான்! உன்னுடைய இந்த நம்பிக்கை எந்தச் சந்தர்ப்பத்திலும் கிறுங்காதிருக்க வேண்டும். ஆனால் அதே பிரசவ அறையில் இன்னொரு நாள் தகவலில்லாமல் இன்னொரு பிள்ளையை நீ கண்டாயானால் அது மற்றொருவன் பெற்றதென்றும் வளர்க்க முடியாமையால் அவன் என் தலையில் கட்ட நினைத்திருக்கிறான் என்றும், நான் இதைப் பெறவில்லை யென்றும் நீ சொல்லுவாய் என்பதிற் சந்தேகம் இல்லை. இது மாத்திரமா? கடவுள் என்பதாக ஒன்று வந்து உன் காதில் “அந்தப் பிள்ளை நமது சிருஷ்டி” ஆகையால், அதை நீ ஒப்புக் கொள் என்று சொன்னாலும், ‘முடியாது முடியாது; அது நான் பெற்றதல்ல. நான் பெற்றது எனக்கிருக்கிறது’ என்றுதான் சொல்லுவாய் என நம்புகிறேன். ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் நீ அப்படிச் சொல்லுவது சரியாக இருக்கலாம். ஏனென்றால் உன்னால் ஏற்பட்ட பிள்ளைக்கு உன் சொத்துச் சேர வேண்டியதும் உன் பிள்ளைக்காக நீ உழைப்பதில் நீ குஷால் அடைவதும் ஞாயம். ஆனால் ஒன்று! நீயும் உன் மனைவியும் உண்டாக்கிய உனது பிள்ளை, கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டது என்று நீ முன், நம்பியதானது இவ்விடத்தில் ஆட்டங் கொடுக்கவில்லையா? ஆனால் உன் சொத்து ஸ்வாதீனம் ஆகிய நன்மையைப் பாதிக்காத முறையில் மேலோடு உன் பிள்ளையைக் கடவுள் சிருஷ்டி என்று நீ சொல்வதில் உனக்கு ஒன்றும் ஆக்ஷேபனையில்லை.

நீயும் உன் மனைவியும் உண்டாக்கிய பிள்ளையைக் கடவுள் உண்டாக்கியது என்று நீ தங்கு தடையின்றிக்