பக்கம் எண் :

136

33
கடவுள் சிருஷ்டியா?


கடவுள் சிருஷ்டிக்கிறார்; எல்லாவற்றையும் எல்லாம் எப்போதும் கடவுளால் சிருஷ்டிக்கப்படுகின்றன. நண்பா! உன் வீட்டில்நேற்றுப் பிறந்த குழந்தையும் அவர்தான் சிருஷ்டித்தார். எவை உன் கண் காது முதலியவற்றிற்குப் புலனாகிவிட்டனவோ அவைகளின் பக்கத்தில் ‘கடவுள் சிருஷ்டி’ என்பதைக் கண்ணை மூடிக்கொண்டு எழுதிவிடலாம். ஆனால், நீ ஒரு விஷயத்தில் தவறிவிடாதே! ஒன்று தோன்றிய பின்புதான் அது கடவுள் சிருஷ்டி! தோன்றாத முன்பு அது தோன்றுதற்கு முன்னறிவிப்பு, கடவுள் சிருஷ்டியில் இல்லை. தோற்றுவிக்குமுன் தெரிவிக்க வேண்டியது கடவுள் பொறுப்பாயிருந்தால், தோற்றுவிக்க காரணத்தைச் சொல்ல வேண்டிய பொறுப்பும் கடவுளுக்கு ஏற்படும். அதன் பிறகு கடவுள் ஏற்பாட்டின் குட்டே வெளிவந்துவிடக் கூடுமல்லவா?

உன் வீட்டிற் பிறந்த குழந்தை கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதென்று மேலே சொன்னேனல்லவா? நீயும் ஆம் என்று நம்பினாய்? ஒரு பரீக்ஷகர் உன்னைக் கேட்ட கேள்விகட்குப் பதில் எழுதிவிட்டு அதை மாத்திரம் நான் தான் எழுதினேன் என்று கட்டாயம் சொல். அப்படியில்லாவிட்டால் நாளைக்கு நீ எதிர்பார்க்கும் உத்தியோகம், சம்பாதனை முதலியவைகட்கு முட்டு ஏற்படும் அல்லவா? நீ எழுதியது உனக்கு நன்றாய்த் தெரியுமாதலானும் அதைக் கடவுள் எழுதினார் என்று சொல்லமாட்டாய்.

மெய்யாகவே உன் வீட்டில் பிரசவ அறையில் கடவுளால் ஒரு குழந்தை சிருஷ்டிக்கப்பட்டதல்லவா?